இவர்கள் தான் இந்த போரின் முதல் கைதிகள்..! ரஷ்யாவில் போருக்கு வலுக்கும் எதிர்ப்பு

0 3102
இவர்கள் தான் இந்த போரின் முதல் கைதிகள்..! ரஷ்யாவில் போருக்கு வலுக்கும் எதிர்ப்பு

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரில், தங்களிடம் சிக்கிய முதல் ரஷ்யக் கைதிகள் என இருவரது புகைபடத்தை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் போருக்கு வலுக்கும் எதிர்ப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ரஷ்ய ராணுவத்திடம் பெண் ஒருவர் தைரியமாக சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரலானது.

தங்கள் நாட்டில் விளைந்த சூரியகாந்தி மலர்களின் விதைகளை உங்களின் சட்டை பைக்குள் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறும் அந்த பெண்மணி நீங்கள் இறந்த பின்னராவது அதில் இருந்து பூக்கள் பூக்கட்டும் என்று புத்திக்கு உரைப்பது போல சத்தம் போட்டார்

இந்த நிலையில் தங்களிடம் சிக்கிய முதல் ரஷ்ய கைதிகள் என இருவரது புகைப்படத்தை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் ஆயுதங்களுடன் சிக்கிய இரு ரஷ்ய வீரர்களும் தங்களது முதல் போர்க் கைதிகள் என்று உக்ரைன் சுட்டிகாட்டி உள்ளது.

எதற்கும் கட்டப்படாமல் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்திவரும் ரஷ்யாவுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் தலைநகர் மாஸ்கோவில் பெருந்திரளாக கூடி, மக்கள் போருக்கு எதிராக ஆவேச குரல் எழுப்பினர்

இதே போல உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு அண்டை நாடுகளிலும் ரஷ்யாவுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments