மேற்கு உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்காக மூன்று குழுக்கள் அமைப்பு
உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்காக வெளியுறவு அமைச்சகம் மூன்று குழுக்களை நியமித்துள்ளது.
போலந்து வழியாக இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரி நக்மா மாலிக் தெரிவித்துள்ளார். ஆயினும் இந்திய மாணவர்கள், உக்ரைனின் எல்லையை கடந்து ருமேனியா போலந்து போன்ற அண்டை நாடுகளின் எல்லைக்கு வந்தாக வேண்டும். இந்தப் பயணத்தின்போது கடும் சவால்களை அவர்கள் கடக்கவேண்டியிருக்கும்.
2,000 கிமீ தொலைவில் உள்ள எல்லைக்கு செல்ல முடியாது என்றும், இரவுபகலாக குண்டுவீச்சு சத்தம் கேட்பதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
Comments