ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயதுச் சிறுவன்... 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

0 1933

ராஜஸ்தான் மாநிலம் சிக்கர் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுவன் 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான்.

Bijarniya ki Dhani பகுதியில் தண்ணீருக்காக தோண்டப்பட்ட அந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது  தவறி விழுந்து சுமார் 50 அடி ஆழத்தில் மண்ணில் சிக்கினான். ராணுவம், காவல்துறையினர், மாவட்ட அதிகாரிகள் உள்பட பலரும் குழந்தையை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.

தொடர்ந்து கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சிறுவன் சுவாசிப்பதற்காக ஆழ்துளைக்குள் குழாய் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments