ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் எங்கெங்கு ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகிறது என்ற தகவல் வெளியீடு
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நிகழ்த்தி வரும் நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் எங்கெங்கு ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் உக்ரைனின் லூஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளில் ஏற்கனவே பல ஆண்டுகளாக ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த பகுதிகள் வழியாக Kramatorsk, Dnirpro பகுதிக்குள் ரஷ்ய படை ஊருவியுள்ளது. அதேபோல, ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் கார்கீவ் பகுதியிலும் ரஷ்யாவின் ராணுவ படை நிலை கொண்டுள்ளது.
கருங்கடல் பகுதியில் இருந்து Odessaa, kherson, mariupol இடங்களிலும் ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல, அண்டை நாடுகளாக ருமேனியா, பெலாரசுடன், எல்லையை பகிந்து கொள்ளும் உக்ரைனின் இவானோ பிராங்கிவிஸ்க், Chernihiv பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் தலைவர் கிவ்வில் உள்ள விமான நிலையம், ராணுவ தலைமையகங்களில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Comments