திமுக பிரமுகரை பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு

0 3837
திமுக பிரமுகரை பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு

காஞ்சிபுரத்தில், அரசியல் ரீதியாக ஏற்பட்ட முன்விரோதத்தால் திமுக பிரமுகரை பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோனேரிகுப்பத்தைச் சேர்ந்த 52 வயதான சேகர் என்பவர், திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். இவரது மனைவி கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை சேகர் இருசக்கர வாகனத்தில் தலையாரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர், அரிவாளால் சேகரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த சேகர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததார்.

கோனேரிக்குப்பம் ஊராட்சி வார்டு உறுப்பினராக இருக்கும் கெளசல்யா என்பவரின் சகோதரரான இளவரசன், முன்விரோதத்தால் சேகரை கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் அவனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments