சட்டவிரோதமாக மரத்தை வெட்டிய தனியார் ஜவுளிக்கடைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
சென்னை பெசன்ட் நகரில், சாலையோரத்தில் இருந்த மரத்தை வெட்டி சேதப்படுத்தியதாக தனியார் ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
சாஸ்திரி நகர் எம்.ஜி ரோட்டில் நேற்று மாலை சிலர் சாலையோரத்தில் இருந்த புங்கை மரத்தை வெட்டுவதைக் கண்ட சமூக ஆர்வலர் ஒருவர், நிழல் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அந்நிறுவனம் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட வன அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மரம் வெட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட தனியார் ஜவுளிக்கடைக்கு அபராதம் விதித்தனர்.
இது தொடர்பாக, திருவான்மியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக மரத்தை வெட்டிய கடைக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி, வனத்துறை அதிகாரிகளை வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு பாராட்டினார்.
Comments