உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியதாக ஐநா தகவல்
உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதை தொடர்ந்து உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியதாகவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் அளிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டிற்கு வரும் மக்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் மருத்துவ உதவிகள் தயார் நிலையில் உள்ளதாக போலந்து நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆயிரக்கணக்கானோரை சிகிச்சைக்காக அனுமதிக்கும் வகையில் 120 மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments