உக்ரைனைச் சுற்றிப் முன்கூட்டியே படைகளைக் குவித்த ரஷ்யா
உக்ரைன் மீது படையெடுக்க முன்கூட்டியே திட்டமிட்ட ரஷ்யா அந்நாட்டைச் சுற்றிலும் பிப்ரவரி 20ஆம் நாளே தனது படைகளைக் குவித்துள்ளது தெரியவந்துள்ளது.
உக்ரைனின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள எல்லைகளில் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் படைகளைத் தயார் நிலையில் குவித்து வைத்திருந்துள்ளது.
டோன்பாசில் ரஷ்ய ஆதரவுக் குழுக்கள் உள்ளதால் அங்கு ஆறாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை நிறுத்தியுள்ளது. உக்ரைனுக்குத் தெற்கே உள்ள கிரிமியாவிலும் படைகளை நிறுத்தியுள்ளது.
உக்ரைனுக்குத் தென்மேற்கே உள்ள மால்டோவாவிலும் ஒரு படைப்பிரிவை நிறுத்தியுள்ளது. வடக்கில் பெலாரசிலும் நான்கு இடங்களில் படைகளைக் குவித்துள்ளது.
வியாழனன்று அதிகாலையில் இந்த அனைத்து இடங்களிலும் இருந்து உக்ரைன் ராணுவ நிலைகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதலைத் தொடங்கியதால் அதை எதிர்கொள்ள முடியாமல் உக்ரைன் திணறியுள்ளது.
விமானப்படைத் தாக்குதல், ஏவுகணைத் தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோதே தரைப்படையின் அணிகளும், பீரங்கிப் படையினரும் எல்லை தாண்டி உக்ரைனுக்குள் முன்னேறியுள்ளனர்.
Comments