உக்ரைன் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்யா

0 2615

உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக ரஷ்ய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அறிவித்துள்ளார்.

உக்ரைன் மீது போரிட்டுள்ள ரஷ்யா, அந்நாட்டின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், அந்நாட்டின் தலைநகரான கீவ்-ஐ ரஷ்யப் படைகள் சூழ்ந்துள்ள நிலையில் யுத்தம் நீடிக்கிறது.

இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பேசிய அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்பதே தங்களின் விருப்பம் என்றும் அந்நாட்டை ஆக்கிரமிக்க யாரும் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments