தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் ; வானிலை ஆய்வு மையம்
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்திற்கு நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளைய தினமும் தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதது. சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, மழைக்கு வாய்ப்பில்லை எனவும், காலை நேரங்களில் மட்டும் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற 28-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனக் கூறியுள்ள வானிலை மையம், தென் தமிழக கடலோரம் மற்றும் குமரிக்கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்கள் இரு நாட்களுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments