ரஷ்யா மீது தீவிரமான பொருளாதாரத் தடைகள் விதிக்கத் திட்டம் - ஜப்பான் பிரதமர்

0 2257

ரஷ்யா மீது தீவிரமான பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் Fumio Kishida தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை கண்டித்து ஜப்பானில் உள்ள ரஷ்ய நிதி நிறுவனங்கள், தொழிலதிபர்கள், ராணுவ நிறுவனங்கள் மீது தீவிரமான தடைகளை விதிக்க உள்ளதாக புவியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

அவர்களின் சொத்துக்களை முடக்க உள்ளதாகவும், ரஷ்ய ராணுவ நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள 120 ஜப்பானியர்களை மீட்க போலந்துடன் ஜப்பான் தூதரகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments