உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மாணவர்களின் செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவிப்பு

0 3232

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்த அறிக்கையில் ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்குள் புகுந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், உக்ரைனுக்கு படிக்கச் சென்ற மற்றும் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழர்களிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தொடர்பு அலுவலர்கள் மூலம் பேசி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கான பயணச் செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கும் எனவும், இது தொடர்பாக அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தின் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments