பட்டாசு ஆலை தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் ; பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

0 1940
பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலை தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

துறையூர் கிராமத்தில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமாக செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடம் முழுவதுமாக சேதமடைந்து தரைமட்டமானது.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில்,விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 6 லட்ச ரூபாய் நிவாரணமும், இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும், குழந்தைகளின் உயர்நிலை-மேல்நிலைக்கல்வி மற்றும் முதலாம் ஆண்டு வரையிலான கல்வி செலவினை முழுவதுமாக ஏற்பதாகவும் பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments