மாணவர்களின் செல்போன்களை நெருப்பில் போட்டு எரிக்கும் ஆசிரியைகள்... சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ

0 2434

இந்தோனேசியாவில் மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு வந்த செல்போன்களை பறிமுதல் செய்த ஆசிரியைகள் அதனை கொளுந்து விட்டெரியும் நெருப்பில் போட்டு எரிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

மாணவர்கள் தங்கள் செல்போனை தரும்படி ஆசிரியையிடம் கெஞ்சியும் கூட மனம் இரங்காத அவர்கள் அந்த செல்போன்களை நெருப்பு பீப்பாய்க்குள் வீசி எறிந்தனர். ஆசிரியைகளின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசிய வெப்தளமான Suara.com ல் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments