சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது

0 3353

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக, நேற்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர்ச் சூழலால் பங்குச்சந்தை சரிந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததின் காரணமாக நேற்று தங்கம் விலை எதிர்பாராதவகையில் சவரனுக்கு 1,856 ரூபாய் உயர்ந்து, 39,608 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்துள்ளது.

கிராமுக்கு 150 குறைந்து ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4,801ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து  ஒரு சவரன்  38,408 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளியும் விலை குறைந்து ஒரு கிராம்  70ரூபாய்க்கும்க்கும்,  கிலோ 70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments