ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் தனித்து விடப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை
உக்ரைனை நேட்டோவில் இணைக்காததால் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் தனித்து விடப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
நேற்று இரவு தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய அவர், ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 தலைவர்களிடம் நேரடியாக கோரிக்கை விடுத்து பேசியதாகவும் தெரிவித்தார்.
ஆனால் யாரும் அச்சம் காரணமாக பதில் அளிக்கவில்லை என்று அவர் கூறினார். ரஷ்யப் படைகளால் 137 பேர் உயிரிழந்ததாகவும் 316 பேர் காயம் அடைந்ததாகவும் கூறிய ஜெலன்ஸ்கி ,உக்ரைன் வீரர்கள் சரண் அடையாமல் உறுதியுடன் நாட்டுக்காக போராடி வருவதாகத் தெரிவித்தார்.
Comments