உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுத்த காரணம் என்ன ?
உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுத்த காரணம் என்ன என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ள.
உக்ரைன் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடு. அதுவும் ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்த பெரிய நாடு உக்ரைன்தான். உக்ரைனை மேலை நாடுகள் பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக ரஷ்யா குற்றம்சாட்டுகிறது. அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ படைகளுடனும் ஐரோப்பிய யூனியனுடனும் உக்ரைன் நெருக்கம் கொண்டு வருவது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் இணைந்துவிட்டால் Donetsk மற்றும் Luhansk பகுதிகள் நேட்டோ படைகளின் கட்டுக்குள் வந்துவிடும் என்றும் ரஷ்யா கூறுகிறது. இதனைத் தவிர்க்கவே ரஷ்யா உக்ரைன் மீது போர்த்தொடுத்து இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Comments