இந்தியா-இலங்கை இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி.... இந்திய அணி அபார வெற்றி!

0 3408

இலங்கைக்கு எதிரான முதல் 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல்  20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவை முதலில் ஆட பணித்தது.

அதன்படி முதலில் ஆடிய இந்திய அணியினர் 20ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்த து. இஷான் கிஷான 89 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 57 ரன்களும், ரோகித் சர்மா 44 ரன்களும் எடுத்தனர்.பின்னர் ஆடிய இலங்கை 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களே எடுத்த து. இதன் மூலம் இந்திய அணி 62ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments