உக்ரைன் மீதான போர், ஐரோப்பிய வரலாற்றில் புதிய திருப்புமுனையாக இருக்கும் - பிரான்ஸ் அதிபர்

0 2010

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐரோப்பிய வரலாற்றில் புதிய திருப்புமுனையாக இருக்கும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் போருக்கு பலமான முறையில் பிரான்ஸ் பதிலடி தரும் என்றும் அவர் கூறினார். ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாகவும் அது ரஷ்யாவின் ராணுவத்தை மட்டுமின்றி அதன் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் நிலைகுலையச் செய்யும் என்றும் மாக்ரோன் தெரிவித்தார்.

தொலைபேசியில் நாட்டுமக்களுக்கு உரை நிகழ்த்திய மாக்ரோன், இந்தப் போரை பதற்றமில்லாமல் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் எதிர்கொள்வோம் என்று உறுதிபடத் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments