உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் எந்த வகையிலும் நியாயமானது இல்லை ; அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

0 1546
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் எந்த வகையிலும் நியாயமானது இல்லை ;

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் எந்த வகையிலும் நியாயமானது இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், ஜி 7 நாடுகளின் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பேசிய ஜோ பைடன், ஜி 7 நாடுகள் தொடர்ந்து ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் நடவடிக்கையை தொடர்வதற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார்.

ரஷ்யாவின் தாக்குதல் நியாயப்படுத்த முடியாதது என்றும் துணிவு மிக்க உக்ரைன் மக்களுக்குத் துணையாக இருப்போம் என்றும் இந்தப் போருக்கான பொறுப்பை ரஷ்யா ஏற்க வைப்போம் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments