குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
சேலத்தில், தனியார் மருத்துவமனையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் சிகிச்சைக்காக 40 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்தும் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாறினர்.
கடந்த நவம்பர் மாதம், சாதனா என்ற பெண்மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிறந்த இரட்டை குழந்தைகளின் எடை 525 கிராம் மட்டுமே இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒரே மாதத்தில் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தும், எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் பெற்றோர்கள் அந்த குழந்தைகளை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அடுத்த 2 நாட்களில் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மனம் தளராத மருத்துவர்கள் மற்றொரு குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.
80 நாட்களுக்கு மேலாக தீவிர கண்காணிப்பில் இருந்த குழந்தையின் எடை 525 கிராமில் இருந்து தற்போது ஒன்னேகால் கிலோவாக அதிகரித்தது. குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Comments