உக்ரைன் பதிலடியில் ரஷ்யப் படையினர் 50 பேர் பலி.!
ரஷ்யப் படையினர் பல முனைகளிலும் உக்ரைனுக்குள் முன்னேறிச் செல்லும் நிலையில், உக்ரைன் படையினரின் பதிலடியில், ரஷ்ய வீரர்கள் 50 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுகுயிவ் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் வீடுகள் வாகனங்கள் சேதமடைந்ததுடன் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் குண்டுவீச்சு, ஏவுகணைத் தாக்குதல் ஆகியவற்றால் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுதம் ஏந்திப் போராட விருப்பமுள்ள எவரும் படையில் சேர்ந்து போரிடலாம் எனப் பொதுமக்களுக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்சி ரெஸ்னிகோவ் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஜி 7 ஆகியன ரஷ்யா மீது பெருமளவில் பொருளாதாரத் தடைகளை விதிக்க உள்ளதாக ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலினா பேர்போக் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலையடுத்து அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு 9 விழுக்காடு சரிந்துள்ளது.
Comments