உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கியுள்ள போரை பிரதமர் மோடி தலையிட்டு நிறுத்த வேண்டும் ; இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் வேண்டுகோள்
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கியுள்ள போர்-ஐ பிரதமர் மோடி தலையிட்டு நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் நாகரிகம் கூட தழைக்காத காலக்கட்டத்தில் உலகிற்கு ராஜாங்க ரீதியான உறவுகள் குறித்து போதனை செய்ய சாணக்கியர் மூலம் தகுதி பெற்ற இந்தியா, ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தி போர்-ஐ நிறுத்த வேண்டும் என உக்ரைன் தூதர் ஐகோர் பொலிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக உள்ளார் எனத் தெரிவித்த ஐகோர் பொலிக்கா, ரஷ்யாவுடன் மோடி சிறப்பான ஒரு உறவை பாதுகாத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
ரஷ்ய அதிபர் புதின் எத்தனை உலக தலைவர்களின் பேச்சை கேட்பார் என தெரியவில்லை, ஆனால் மோடி சொன்னால் அவர் கேட்பார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக ஐகோர் பொலிக்கா கூறினார்.
Comments