இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் சாலையோர பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு

0 2533
இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் சாலையோர பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர், சாலையோர பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பன்னியாமலையை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரது 22 வயது மகன் அர்ஜூனன், நேற்றிரவு நண்பர்களை சந்தித்து விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, நத்தம் சாலையில் வேகமாக சென்ற போது, நிலைத்தடுமாறி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு விழுந்து உயிரிழந்தார்.

இதனை பின்னால் வந்த மற்றொரு வாகன ஓட்டி, பார்த்துவிட்டு கடந்து செல்வதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் அர்ஜூனனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments