முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய புகாரில், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜெயக்குமார் மீது அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வழக்கிலும் அவரை கைது செய்தனர்.
ஜெயக்குமாரை மார்ச் 9-ந் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும், திமுக பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கப்படாததால் ஜெயக்குமார் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஜெயக்குமாரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
Comments