வந்தது அஜித்தின் ''வலிமை''.. தியேட்டரை பதம் பார்த்த ரசிகர்கள்
சுமார் இரண்டரை வருட காத்திருப்புக்கு பிறகு நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம், திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில், சில இடங்களில் முதல் காட்சி திரையிட தாமதமானதாலும், உள்ளே செல்ல அனுமதிக்காததாலும் விரக்தியில் திரையரங்குகளை பதம் பார்த்த அஜித் ரசிகர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்திதொகுப்பு...
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படத்தின் வெளியீடு கொரோனா காரணமாக தள்ளிப்போன நிலையில், ஒருவழியாக இன்று திரையரங்குகளில் வெளியானது.
சுமார் இரண்டரை வருடங்களாக உள்ளூர் பிரமுகர்கள் முதல் உலக பிரமுகர்கள் வரையில் அனைவரிடம் வலிமை அப்டேட் கேட்டு நச்சரித்த அஜித் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. முதல் காட்சி 4 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், அதற்கு முன்பே திரையரங்கு முன் குவிந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும், அஜித்தின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். திரையரங்குகள் அதிகாலையிலேயே களைகட்டின.
கோயம்புத்தூர் 100 அடி சாலையில் உள்ள கங்கா யமுனா காவேரி தியேட்டர் வளாகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிச் சென்றனர். இது தொடர்பாக காந்திபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
வாணியம்பாடியில் திரையரங்கில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக படம் திரையிடப்படாததால் ஏமாற்றமடைத்துடன் வெளியேறினர்.
சேலத்தில் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் அதிகாலையில் கூடிய அஜித் ரசிகர்கள், உடனே உள்ளே செல்ல அனுமதிக்காத ஆத்திரத்தில் தியேட்டரின் பால் சீலிங் மற்றும் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். அதிகாலை 5 மணிக்கு வலிமை சிறப்பு காட்சி திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே திரண்ட ரசிகர்கள் சிலர், உடனடியாக உள்ளே செல்ல அனுமதிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தியேட்டருக்குள் செல்லும் வழியில் இருந்த கிரில் கேட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். தகவலறிந்து வந்த போலீசார், இளைஞர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து படம் திரையிடப்பட்டது.
நாமக்கல்லில் உள்ள திரையரங்கில் வலிமை படத்தை காண முந்தியடித்துக் கொண்டு திரண்ட ரசிகர்கள், படத்தை திரையிட தாமதமானதால் கதவிற்கு நாட்டு வெடி வைத்து தகர்க்க முயன்றனர். கே.எஸ் திரையரங்கில் முதல் காட்சி திரையிட தாமதமானதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், தியேட்டர் நுழைவாயிலில் உள்ள கேட்டில் நாட்டு வெடியை கட்டினார். தகவலறிந்து வந்த போலீசார் நாட்டு வெடியை அப்புறப்படுத்த முயன்ற போது, போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சேலம், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் அதிகாலையில் கூடிய அஜித் ரசிகர்கள், உடனே உள்ளே செல்ல அனுமதிக்காத ஆத்திரத்தில் தியேட்டரின் பால் சீலிங் மற்றும் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். அதிகாலை 5 மணிக்கு வலிமை சிறப்பு காட்சி திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே திரண்ட ரசிகர்கள் சிலர், உடனடியாக உள்ளே செல்ல அனுமதிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தியேட்டருக்குள் செல்லும் வழியில் இருந்த கிரில் கேட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். தகவலறிந்து வந்த போலீசார், இளைஞர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து படம் திரையிடப்பட்டது.
நாமக்கல்லில் உள்ள திரையரங்கில் வலிமை படத்தை காண முந்தியடித்துக் கொண்டு திரண்ட ரசிகர்கள், படத்தை திரையிட தாமதமானதால் கதவிற்கு நாட்டு வெடி வைத்து தகர்க்க முயன்றனர். கே.எஸ் திரையரங்கில் அதிகாலை 4 மணிக்கு திரையிட வேண்டிய முதல் காட்சி திரையிட தாமதமானதால் ரசிகர்கள் தியேட்டருக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், தியேட்டர் நுழைவாயிலில் உள்ள கேட்டில் நாட்டு வெடியை கட்டினார். தகவலறிந்து வந்த போலீசார் நாட்டு வெடியை அப்புறப்படுத்த முயன்ற போது, போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கரூரில் நடிகர் அஜித்தின் கட் அவுட்டுக்கு, ரசிகர்கள் பீரை ஊற்றி அபிஷேகம் செய்து, கொண்டாடி மகிழ்ந்தனர். கரூரில் உள்ள 4 தியேட்டர்களின் வலிமை படம் வெளியாகியுள்ள நிலையில், கலையரங்கம் தியேட்டருக்கு முன்பு திரண்ட ரசிகர்கள் பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க நடனமாடினர். பின்னர், அஜித் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகத்தோடு பீர் அபிஷேகமும் செய்தனர்.
நாகையில், வலிமை படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அஜித் ரசிகர் ஒருவர், சாலையில் பைக் சாகசம் செய்தார். பாண்டியன் திரையரங்கிற்கு வெளியே, பின்னால் பேருந்து வருவதைக் கூட பொருட்படுத்தாமல் அந்த இளைஞர், ஆபத்தான முறையில் பைக்கின் முன் வீலை தூக்கி வட்டமிட்டு சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கோஷங்களை எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினர்.
Comments