இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி - ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 864 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், பங்குசந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து, தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
புதன்கிழமையான நேற்று சவரனுக்கு 248 ரூபாய் குறைந்திருந்த தங்கம் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு 864 ரூபாய் உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் கிராம் தங்கம் 108 ரூபாய் அதிகரித்து 4827 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 864 ரூபாய் அதிகரித்து 38ஆயிரத்து616 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விலை 40ஆயிரம் ரூபாயை தாண்டும் என கூறப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு 1900 ரூபாய் அதிகரித்து 70,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments