தீபாவளி பண்டு மூலம் ரூ.37.5 லட்சம் ஏமாற்றியதாக புகார்... 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் கைது

0 2499

சென்னை தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டுச் சீட்டு நடத்தி 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை ஏமாற்றியதாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சண்முக சுந்தரி என்பவர் மாதந்தோறும் பணம் செலுத்தினால் தீபாவளிக்கு தங்கம், இனிப்புகளுடன், பணம் உள்ளிட்டவைகளை தருவதாக பலரிடம் கூறி 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூலித்து கடந்த 2016ஆம் ஆண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்த சண்முக சுந்தரியை சென்னை எழும்பூரில் வைத்து கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments