ராஜஸ்தானில் நடுவழியில் ரயிலை நிறுத்தி நொறுக்குத்தீனி வாங்கும் என்ஜின் டிரைவர்கள்.. வீடியோ இணையத்தில் வெளியானதால் 5 பேர் பணியிடை நீக்கம்

0 1773

ராஜஸ்தானில் ரயில்வே கிராசிங்கில் ரயிலை நிறுத்தி ஓட்டுநர் நொறுக்குத் தீனி வாங்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் ரயில் ஓட்டுநர்கள் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Daudpur ரயில்வே கிராசிங்கில் நாள்தோறும் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி அவருக்காக காத்திருக்கும் வியாபாரியிடம் கச்சோரி பதார்த்ததை பெறுவதாகவும், பின்னர் ரயிலை இயக்குவதாகவும், இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து ரயில் ஓட்டுநர்கள், கேட்மேன் இருவர் உள்பட 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments