அண்டார்க்டிக் கண்டத்தில் 1990ஐ விட 3 மடங்கு பனியின் அளவு குறைவு.. பனிப்பாறை நிபுணர் எச்சரிக்கை
அண்டார்க்டிக் கண்டத்தில் கடந்த 1990ம் ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது பனியின் அளவு 3 மடங்கு குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஆய்வு நடத்திய கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணரான டெட் ஸ்கம்போஸ் எழுதியுள்ள ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஆய்வில் தற்போதுதான் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு 8 லட்சத்து 10 ஆயிரம் சதுர மைலாக இருந்த பனிப் பரப்பு கடந்த 20ம் தேதி 7 லட்சத்து 65 ஆயிரம் சதுர மைலாக குறைந்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனால் காலநிலை மாற்றத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்றும் ஸ்கம்போஸ் எச்சரித்துள்ளார்.
Comments