புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு.. ஏற்பாடுகள் தீவிரம்

0 2545

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாக்களுக்கான ஏற்பாடுகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தீவிரம் அடைந்துள்ளன.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சென்னை உள்பட 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. இதே போல 132 நகராட்சிகளிலும், 435 பேரூராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் போன்றவை அதிகளவில் வார்டுகளை கைப்பற்றி உள்ளன.

அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் குறைந்த அளவில் வார்டுகளை கைப்பற்றி உள்ளன. வெற்றி பெற்ற உறுப்பினர்கள் வருகிற 2-ந்தேதி பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கான பதவி ஏற்பு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் தொடங்கி உள்ளன.

மாநகராட்சி வார்டுகளில் வெற்றி பெற்ற 1,369 உறுப்பினர்களுக்கு அந்தந்த மாநகராட்சி கமி ஷனர்கள் பதவி பிரமாணம் செய்து வைப்பார்கள். இதற்கான பதவி ஏற்பு விழா வருகிற 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும்.வார்டு வாரியாக வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அழைக்கப்படுவார்கள்.

அவர்கள் மாநகராட்சி கமி ஷனர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். இதே போல நகராட்சிகளில் வெற்றி பெற்ற 3,824 உறுப்பினர்களுக்கு அந்தந்த நகராட்சி கமி ஷனர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்கள்.

பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 7,408 உறுப்பினர்கள் செயல் அலுவலர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். இதன் பின்னர் மேயர், துணை மேயர்கள் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் அடுத்த மாதம் 4-ந்தேதி நடைபெறுகிறது. 21 மேயர்கள், துணை மேயர்கள், 138 நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், 489 பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் என மொத்தம் 1,298 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் கடந்த சில நாட்களாக சீரமைக்கும் பணிகள் நடந்து வந்தன.

மேயர், துணை மேயர் இருக்கைகள், உறுப்பினர்கள் இருக்கைகள், அவர்களின் அறைகள் போன்றவை புனரமைக்கும் பணிகள் நடந்து வந்தன. புதுப்பொலிவுடன் உள்ளாட்சி அலுவலகங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments