ரஷ்யாவுடனான போர் பதற்றத்தால் உக்ரைனில் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம்

0 2102

தங்கள் நாட்டு எல்லையில் 2 லட்சம் வீரர்களை ரஷ்யா குவித்திருப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். போர் அபாயம் எழுந்துள்ளதால் உக்ரைன் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் அச்சுறுத்தல் காரணமாக, தேசிய அவசரகால நிலையை அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. மேலும் ரஷியாவில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறவேண்டும் என உக்ரைன் அரசு அறிவுறுத்தி உள்ளது. போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா உருக்கமான கடைசி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்தவோ படையெடுக்கவோ உக்ரைனுக்கு எண்ணமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது போர் மூண்டால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய போராக மாறும் என்றும்அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.உக்ரைனின் மக்களுக்கு கடுமையான பாதுகாப்பு பிரச்சினை எழுந்துள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டுவதாக அதிபர் புதின் கூறுவது அபத்தமானது என்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே உக்ரைன் பிரச்சினை தொடர்பாக ஐநா.பொது சபையின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மற்றும் ஜெர்மனி பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்ததைத் தொடர்ந்து இக்கூட்டம் நடைபெற்றது.உக்ரைனைப் போரில் இருந்து பாதுகாக்க ஆலோசிக்கப்பட்டது.

அமைதிக்கான வாய்ப்பை தருமாறு ரஷ்யாவுக்கு வலியுறுத்தப்ப்டடது.இருதரப்பினரும் பதற்றத்தை அதிகரிக்காமல் பேச்சுவார்த்தையைத் தொடருமாறு கோரிக்கை விடுத்திருப்பதாக ஐநா.பொதுச்செயலாளர் அந்தோணியோ கட்டாரஸ் 193 நாடுகளின் கூட்டத்தில் தெரிவித்தார். ரஷ்யா போரை நடத்தினால் அது தனிமைப்படுத்தப்படும் என்றும் குட்டரஸ் எச்சரித்துள்ளார். உக்ரைன் கிழக்கில் இனப்படுகொலைகளுக்கான அச்சுறுத்தல்கள் உள்ளதாக ரஷ்யா கூறிய புகாரை அமெரிக்கா, உக்ரைன் ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments