நள்ளிரவில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலிச்சரடு பறிப்பு

0 2350
நள்ளிரவில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலிச்சரடு பறிப்பு

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே நள்ளிரவில் வீட்டுக் கதவின் தாழ்பாளை மெல்லிய துணியின் உதவி கொண்டு திறந்து, உள்ளே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச்சரடு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தொளார் கிராமத்தைச் சேர்ந்த கரிகாலன் என்பவர் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி ரமாராணியும் உறவுக்காரப் பெண்ணும் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர்.

நள்ளிரவில் வீட்டின் பின்பக்க மரக்கதவுகளுக்கு நடுவே கடப்பாறையை நுழைத்து விலக்கிய கொள்ளையர்கள், முடிச்சுகள் போட்டு இணைக்கப்பட்ட மெல்லிய துணியை உள்ளே நுழைத்து, மேற்புறத் தாழ்பாளை திறந்துள்ளனர்.

பின்னர் தூங்கிக் கொண்டிருந்த ரமாராணியின் கழுத்தில் இருந்த 8 சவரன் மதிப்புள்ள தாலிச் சரடைப் பிடித்து இழுத்துள்ளனர். கண்விழித்துக் கூச்சலிட்ட ரமாராணி, தாலியை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளவே, அதன் ஒரு பாதியுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments