இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு

0 6906
இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிக்க இந்திய மாணவர்கள் ஆர்வம்

இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த 4 ஆண்டுகளில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

உயர்தர கல்வி, சர்வதேச அங்கீகாரம், பன்முக கலாச்சாரம், வேலை வாய்ப்பில் முன்னுரிமை, வெளிநாட்டு அனுபவம் போன்ற காரணங்களால் இங்கிலாந்தில் படிக்க இந்திய மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு படிக்க விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்து வருகிறது. உலகளவில், இங்கிலாந்தில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ள விண்ணப்பிப்பதில் சீன மாணவர்களுக்கு அடுத்தபடியாக இந்திய மாணவர்கள் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்தது முதல் செவிலியர் படிப்பில் பட்டம் பெற இந்தியர்கள் அதிக விருப்பம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments