மலைப்பகுதி கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்... மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே பிறந்த ஆண் குழந்தை !

0 1409

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை கிராமத்தில் பிரசவ வலி ஏற்பட்டு வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸ்க்குள்ளேயே வைத்து பிரசவம் பார்க்கப்பட்டது.

பட்டேபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பத்திரி என்ற பெண் பிரசவ வலியால் துடித்து 108 ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்து வரவழைத்துள்ளார். மலைப்பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வாகனம் செல்ல முடியாததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், மருத்துவ உதவியாளரும் ஸ்ட்ரெச்சரை எடுத்துச் சென்றுள்ளனர்.

அப்பெண்ணின் உறவினர்களுடன் இணைந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை பத்திரியை தூக்கிக்கொண்டு வந்து ஆம்புலன்சில் ஏற்றியுள்ளனர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே வலி அதிகரித்ததை அடுத்து அவசரகால மருத்துவ உதவியாளர் சிவா ஆம்புலன்ஸை ஓரம் கட்டச் சொல்லி உள்ளேயே பிரசவம் பார்த்துள்ளார்.

அதில் அந்த பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாயும் சேயும் நலமாக உள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments