மக்களை தேடி மருத்துவம் திட்டம் ; 50 லட்சமாவது பயனாளிக்கு நேரடியாக மருந்துப் பொருட்களை வழங்கிய முதலமைச்சர்

0 1660

தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று மருந்துப் பொருட்களை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில், பயனாளிக்கு வீடு தேடி சென்று மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் வழங்கினார். இதேபோல், சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் வகையில் செயல்படுத்தப்படும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

மேலும், உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 188 புதிய ஆம்புலன்ஸ்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments