கொலம்பியாவில் கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அனுமதி

0 1555

கொலம்பியாவில் கருத்தரித்த பெண்கள், 24 வாரத்திற்குள் கருக்கலைப்பு செய்துக் கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவில் மூன்று சூழ்நிலைகளில் மட்டுமே சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்துக் கொள்ள முடியும். பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருக்கும் போதோ, கருவில் குறைபாடுகள் இருந்தாலோ, பாலியல் வன்கொடுமையால் கருவுற்றாலோ கருக்கலைப்பு செய்துக் கொள்ளலாம். இந்த சூழ்நிலைகளுக்குப் புறம்பாக கருவை கலைக்க முற்படும் பெண்கள், 54 மாதங்கள் வரை சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

இந்த சட்டத்தை நீக்கக்கோரி பல ஆண்டுகளாக பெண்ணிய இயக்கங்கள் போராடி வந்த நிலையில், தற்போது கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வமாக அனுமதி வழங்குவதாக கொலம்பிய உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும், 24 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமானது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏராளமான பெண்கள், பொகோட்டாவில் ஒன்று திரண்டு கொண்டாடினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments