ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

0 1181
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் மாயமாகி உள்ளனர்.

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடலோர பகுதிகளில் புயல் காற்று வீசி வருவதன் எதிரொலியாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

சில இடங்களில் 4.6 அடி உயரம் வரை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வாகன போக்குவரத்தும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.

மீட்புப்படையினர் குவிக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கித்தவிப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வாகனத்துடன் நீரில் மூழ்கிய பெண்ணின் சடலத்தை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments