கம்போடியாவில் 3 - 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி

0 1738

கம்போடியா நாட்டில் 3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சீனாவின் சினோவாக் தடுப்பூசி செலுத்தப்படுமென அந்நாட்டு பிரதமர் சாம்டெக் டெக் ஹுன் சென் அறிவித்திருந்தார். நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள் என்றும் 3 முதல் 5 வயதுக்குட்பட்ட சுமார் 7 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

அதன் படி, கம்போடியா தலைநகர் புனோம் பென்-இல் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments