ரஷ்யா - உக்ரைன் மோதல் விவகாரம் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 1880

உக்ரைன் - ரஷ்யா இடையே நிலவும் போர் சூழல் மற்றும் உயரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சிலின் உயர்மட்டக் குழு கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பேசிய அவர், உக்ரைனில் சர்வதேச அளவில் கவலைக்குரிய சூழல் நிலவி வருவதாகவும், இந்த பிரச்சனைக்கு தூதரக வழிமுறையில் தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், போர் பதற்றத்தால் நாட்டின் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என கூறிய நிர்மலா சீதாராமன், ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments