கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்தியர்கள் 50 பேருக்கு அனுமதி

0 1256

இலங்கை கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்தியர்கள் 50 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கி அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா இந்த ஆண்டு மார்ச் மாதம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. கொரோனா பரவலைக் காரணம் காட்டி கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பக்தர்களின்றி திருவிழா நடத்தப்படும் என இலங்கை அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த கோரிக்கையை ஏற்று இலங்கையைச் சேர்ந்த 50 பக்தர்களுக்கும் இந்தியாவைச் சேர்ந்த 50 பக்தர்களுக்கும் திருவிழாவில் பங்கேற்க அனுமதி அளித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments