ராணுவ பெண் அதிகாரிகளால் முதன் முறையாக இயக்கப்பட்ட பாய்மர படகு.!

0 1977

இந்திய வரலாற்றில் முதன்முறையாக சென்னை முதல் விசாகப்பட்டினம் வரை சுமார் ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரம் பாய்மர படகு பயணம் மேற்கொண்ட இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் சென்னை துறைமுகம் திரும்பினர்.

கடந்த 15-ஆம் தேதி பயணத்தை தொடங்கிய 10 பேர் அடங்கிய குழு, 8 நாட்களில் கடல் வழியாக விசாகப்பட்டினம் சென்று திரும்பினர். இந்த பயணத்துக்காக பெண் அதிகாரிகள் 30 நாட்கள் மும்பை மற்றும் சென்னையில் சிறப்பு பயிற்சி மேற்கொண்டனர்.

சென்னைக்கு திரும்பிய பெண் அதிகாரிகளை சென்னை துறைமுக துணை தலைவர் பாலாஜி அருண்குமார் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments