தமிழகத்தில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்.!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் ஆவணங்கள் இன்றி 50ஆயிரத்திற்கும் மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது, அரசியல் கட்சிகள் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தபட்டிருந்தன.
மேலும், அனைத்து இடங்களும் பறக்கும் படையின் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மறுவாக்குப்பதிவு நடைபெறும் கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Comments