கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை.. பெட்ரோல், டீசல் தட்டுபாடு.. 5 மணி நேரம் மின் வெட்டு..
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், எரிபொருள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வாகன எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.
இலங்கையின் பல இடங்களில் பெட்ரோல் நிரப்பும் மையங்கள் மூடப்பட்டதாலும், குறைந்த அளவிலான எரிபொருள் மிச்சம் இருப்பதாலும் எரிபொருள் நிரப்ப வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மின் உற்பத்திக்கு தேவைப்படும் எரிபொருளிலும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு 2 முதல் 5 மணி நேரம் வரை மின் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கோவிட் காலத்தில் நிதி நெருக்கடிக்கு ஆளான இலங்கைக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வெளிநாட்டு கடன் இருப்பதாக கூறப்படுகிறது.
Comments