கர்நாடகாவில் பஜ்ரங் தளத்தை சேர்ந்த இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு.. 6 பேர் கைது.!
கர்நாடகா சிவமோகாவில் பஜ்ரங் தளத்தை சேர்ந்த இளைஞர் ஹர்சா கொலைச் செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வழக்கு தொடர்பாக 12 பேர் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். ஹிஜாப் விவகாரம் தொடர்பாக ஹர்சா கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சிவமோகாவில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வரை 144 தடை உத்தரவை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டும் அத்தியாவசியப் பணிகளுக்காக மக்கள் வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
Comments