திமுக வேட்பாளர் சமீனா வெற்றி.. அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்ட தனது கணவர் சமாதியில் வெற்றிச் சான்றிதழை வைத்து கண்ணீர் அஞ்சலி..

0 2888
திமுக வேட்பாளர் சமீனா வெற்றி.. அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்ட தனது கணவர் சமாதியில் வெற்றிச் சான்றிதழை வைத்து கண்ணீர் அஞ்சலி..

சென்னை மாநகராட்சி 188 வது வார்டில் வெற்றிபெற்ற திமுக  வேட்பாளர் சமீனா, அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்ட தனது கணவர் மடிப்பாக்கம் செல்வத்தின் சமாதிக்கு சென்று வெற்றிச் சான்றிதழை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். செல்வத்தின் சமாதியில் ரெட்புல் ஊக்கபானம் ஊற்றப்பட்டு உறுதிமொழி ஏற்ற பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை மடிப்பாக்கம் 188 வது வட்டச் செயலாளர் செல்வம் சில தினங்களுக்கு முன்பு மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளைப் போலீசார் தேடி வரும் நிலையில், மாநகராட்சி தேர்தலில் 188 வது வார்டு திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்ட மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவி சமீனா மகத்தான வெற்றி பெற்றார் . இதனை தொடர்ந்து அவரை ஆதரவாளர்கள் குத்தாட்டம் போட்டபடி ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.

தேர்தல் வெற்றிக்காக தனக்கு அணிவிக்கப்பட்ட ஆளுயுர மாலையை தனது கணவர் சமாதியில் வைத்த அவர் வெற்றிச்சான்றிதழை சமாதியில் வைத்து தீபம் ஏற்றி கதறி அழுதார்.

இறந்தவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைப்பது போல, கணவர் செல்வம் விரும்பி அருந்தும் ரெட்புல் ஊக்கப்பானத்தை சமாதியில் ஊற்றச்சொல்லி தனது கணவருக்கு படைத்தார்.

அதன் தொடர்ச்சியாக அங்கிருந்த திமுக நிர்வாகிகள் மடிப்பாக்கம் பகுதி மக்களுக்கு செல்வம் செய்ய நினைத்திருந்த அனைத்து பணிகளையும் செய்து முடிப்போம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments