நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி.!
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது.சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளும், 134 நகராட்சிகளும் தி.மு.க. வசமாகி உள்ளன.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், கடம்பூர் தவிர்த்து 489 பேரூராட்சி அமைப்புகளில் உள்ள 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியது.
வாக்குப்பதிவு நடைபெற்ற 138 நகராட்சிகளில் 134-ல் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளே வெற்றி வாகை சூடின. மாநகராட்சி, நகராட்சிகளை போலவே பேரூராட்சிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே மிக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
அதேபோல் தேர்தல் நடந்த 489 பேரூராட்சிகளில் 435 ஐ திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின.
16 பேரூராட்சிகளில் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடிந்துள்ளது. மொத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 90 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
Comments