நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகபடியான பேரூராட்சிகளை கைப்பற்றியது திமுக
தமிழகத்தில் மொத்தமாக 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், பெரும்பான்மையான மாவட்டங்களில் மொத்த பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. 16 பேரூராட்சிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக பெரும்பான்மையான இடங்களில் மொத்த வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பேரூராட்சி, கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி, ஒடையகுளம், சமத்தூர், சூளேஸ்வரன்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகளில் மொத்த வார்டுகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
இந்த பேரூராட்சிகளில் அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல, திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம், வத்தலகுண்டு பேரூராட்சியிலும், திருச்சி மாவட்டம் கூத்தைப்பார், மணச்சநல்லூர் பேரூராட்சிகளிலும் மொத்த வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் இருக்கும் நிலையில், 15 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 33 பேரூராட்சிகளில் 32 பேரூராட்சிகளை திமுக தன்வசமாக்கியது. வெள்ளலூர் பேரூராட்சியான ஒரு இடத்தில் மட்டும் அதிமுக வென்றுள்ளது.
ஈரோடு மாவட்டம் லக்கம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் மருகூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமலப்புரம், சேலம் மாவட்டம் வடவாசல், திசையன்விளை, தலைஞாயிறு, வெங்கரை, பரவை என மொத்தமாக 16 பேரூராட்சிகளில் அதிமுக தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. மீதமுள்ள 473 பேரூராட்சிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றி உள்ளன
Comments