தேர்தல் முறைகேடுகள் பற்றி அனைத்து வித புகார்களுடன் நீதிமன்றத்தை அணுக உள்ளேன்-அண்ணாமலை

0 1629

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் பற்றி அனைத்து வித புகார்களுடன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments