தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர்-மனைவியின் தோல்வியைத் தாங்க முடியாமல் கணவர் தற்கொலை

0 2916

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக பெண் வேட்பாளர் தேர்தலில் தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

முனிசிபல் காலனியைச் சேர்ந்த நாகராஜ் நகராட்சியில் கொத்தனாராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுகுணா நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 19வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். 930 வாக்குகள் பதிவானதில் 215 வாக்குகள் மட்டுமே பெற்று திமுக வேட்பாளரிடம் சுகுணா தோல்வி அடைந்தார்.

மனைவியின் வெற்றிக்காக பல இடங்களில் கடன் வாங்கி நாகராஜ் செலவு செய்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது தோல்வி நாகராஜை மனதளவில் பாதித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற நாகராஜ் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments